“ஸ்கூலுக்கு போறேன்…” வீட்டில் சொன்ன பொய்… காரில் ஜாலியாக சுற்றும் ஜோடி… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 12, 2026

Spread the love

தற்போதைய இளைய தலைமுறையினரின் போக்கையும், பெற்றோரின் நம்பிக்கையைச் சில பிள்ளைகள் எப்படிக் கேலி கூத்தாக்குகிறார்கள் என்பதையும் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உள்ளவர்களிடம் தாம் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் மாணவி ஒருவர், காதலனுடன் காரில் ஏறி ஓட்டல்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படிப்பு என்ற போர்வையில் எல்லை மீறிச் செல்லும் இதுபோன்ற செயல்களால் பெற்றோரின் பல ஆண்டு உழைப்பும் நம்பிக்கையும் கேள்விக்குறியாகி வருவதாக நெட்டிசன்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டில் யாராவது தடுத்தாலோ அல்லது கேள்வி கேட்டாலோ விபரீதமாக நடப்போம் என்று மிரட்டும் போக்கை இளைய தலைமுறையினர் பின்பற்றுவது பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பகத்தன்மையையும் குடும்பப் பொறுப்பையும் முற்றிலுமாக மறந்துவிட்டுச் செயல்படும் Gen-Z தலைமுறையினரின் இந்தச் செயல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.