அரசாங்கம் வரலனா என்ன?… இனி ஒரு கர்ப்பிணியும் சாகக் கூடாது… ஆத்திரத்தில் ஓடையை அடைத்து பாதை அமைத்த பழங்குடியின மக்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

By Swetha on ஐப்பசி 4, 2026

Spread the love

அல்லூரி மாவட்டத்தில் உள்ள ஜே.கே. வீதி மண்டலத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், அதிகாரிகளின் வருகைக்காகவோ அல்லது அரசின் உதவிக்காகவோ காத்திருக்காமல் தங்களின் சொந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். கர்ப்பிணிப் பெண்களையும், பசி அறியாத பிஞ்சுக் குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தூக்குப்பாடை பயன்படுத்தும் அவல நிலை இனி தொடரக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர். இந்தத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி பழங்குடியின மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கூட்டு முடிவெடுத்தனர்.

இதற்காக கொல்லப்பள்ளி, பெப்பம்பள்ளி மற்றும் தடக்கப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து, ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் தலா ரூ. 200 வசூலித்தனர். அந்தப் பணத்தைக் கொண்டு டிராக்டர்கள் மூலமாக பெரிய கற்களைக் கொண்டு வந்து, கொல்லப்பள்ளி மற்றும் நடைனிவீதி கிராமங்களுக்கு இடையே செல்லும் ஓடையில் சிரமதான முறையில் கற்களால் ஆன தடுப்பணையை எழுப்பத் தொடங்கினர். பணிகள் நடைபெற்ற இடத்திலேயே உணவைச் சமைத்துச் சாப்பிட்டு, அனைவரும் கைகொடுத்து இந்தச் சிரமதானப் பணியை முழுமையாக நிறைவு செய்தனர்.

   

இவர்களின் இந்தத் தீவிர முயற்சியின் பலனாக, ஓடையின் குறுக்கே தற்போது ஒரு புதிய தரைப்பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து சாத்தியமாகியுள்ளது. இப்போது அந்தப் பாதையில் இருசக்கர வாகனங்கள், ஜீப்புகள் மற்றும் டிராக்டர்கள் எளிதாகச் சென்று வரக்கூடிய வகையில் பாதை தயாராகியுள்ளது. அரசின் உதவியை எதிர்பார்க்காமல் தங்களின் அத்தியாவசியத் தேவையைத் தாங்களே பூர்த்தி செய்துகொண்ட இந்த பழங்குடியின மக்களின் கூட்டு முயற்சி அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது.