“உதவி செய்வதாகக் கூறி பித்தலாட்டம்…” வங்கியில் இளம் பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர்…. சிசிடிவி-யில் சிக்கிய ஆதாரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் சஃபிடோன் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், இளம் பெண் ஒருவருக்கு உதவி செய்வது போல நடித்து ரூ.1.25 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மோசடி நபரைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளம் பெண் வங்கியில் பணம் செலுத்துவதற்காக வைப்பு படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி படிவத்தை வாங்கி, கணக்கு எண்ணை மாற்றியுள்ளார். படிவத்தில் கணக்கு எண் தவறாக இருந்ததால், வங்கி ஊழியர்கள் அந்தப் பெண்ணை வேறொரு படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு கூறியுள்ளனர். அந்தச் இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், பெண்ணின் ரூ.1.25 லட்சம் ரொக்கம் மற்றும் பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு வங்கியிலிருந்து தப்பியோடியுள்ளார்.

   

இந்த முழுச் சம்பவமும் வங்கியின் சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பணத்தைக் சுருட்டிய நபர், வங்கியிலிருந்து வெளியேறி எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையை நோக்கிச் சென்ற காட்சிகளை வைத்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “வங்கிக்குள் அறிமுகமில்லாத நபர்களிடம் படிவங்களையோ, பணத்தையோ கொடுக்க வேண்டாம்” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.