தலையில் இருக்கிற ஈறும் பேனும் எப்பவுமே பெரும் தொல்லைதான்… இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்க – தீர்வு கிடைபபது நிச்சயம்!

By Elango on மார்கழி 27, 2025

Spread the love

தலையில் ஈறுகள் பேன்கல் இருந்தாலே அரிப்பு எரிச்சலை ஏற்படுத்தும். இதை நீக்குவது ரொம்பவும் கஷ்டமான விஷயம். பேன்களை விரட்ட மருந்துகள் இருந்தாலும் ஈறுகளை தலையில் இருந்து நீக்க முடியாது. கூந்தலில் இருக்கும் ஈறுகள் பேன்களை நிரந்தரமாக நீக்குவதற்கு ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம்.

வெங்காயச்சாறு
தலைமுடி வளர்ச்சிக்கு வெங்காயச்சாறை பலரும் பயன்படுத்துகின்றனர். இதில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியா மற்றும் ஆன்ட்டி ஃப்கஸ் பண்புகள் தலையில் இருந்து பேன்களை நிரந்தரமாக நீக்கும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து அரைத்து அதன் சாற்றை உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் அப்படியே இருந்து விட்டு பிறகு பேன் சீப்பு கொண்டு வாறினால் தலையில் இருக்கும் ஈறு பேன்கள் வெளியே வந்துவிடும். பிறகு ஷாம்பு போட்டு குளிக்கலாம். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

   

பூண்டு
பூண்டில் இருக்கும் கடுமையான வாசனை மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்பு தலையில் இருக்கும் பேன்கள் ஈறுகளை அகற்ற உதவுகிறது 8 அல்லது 10 பூண்டை நன்றாக அரைத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை தலையில் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்ஒடம். பிறகு பேன் சீப்பு கொண்டு வாறி விட்டு பின்பு மிதமான சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி செய்யலாம்.

   

வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெயில் இருக்கும் கடுமையான வாசனை மற்றும் அதன் கசப்பு தன்மை உச்சந்தலையில் இருக்கும் ஈறுகள் மற்றும் பேன்களை நிரந்தரமாக நீக்க உதவுகிறது. இதற்கு தலைக்கு குளிப்பதற்கு சுமார் 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன் வேப்ப எண்ணையை தலையில் தேய்க்க வேண்டும். பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும்.

 

தேயிலை எண்ணெய்
தேயிலை எண்ணெயில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்பு தலையில் இருக்கும் ஈறுகள் பேன்களை நிரந்தரமாக அற்ற உதவுகிறது. தேயிலை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து உச்சந்தலை முதல் நுனி வரை தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து பிறகு ஷவர் கேப் கொண்டு தலைமுடியை கவர் செய்து விட்டு ஒரு மணி நேரம் அப்படியே இருந்துவிட வேண்டும். பிறகு பேன் சீப்பை பயன்படுத்தி தலையில் இருக்கும் ஈறுகள் பேன்களை அகற்றலாம். வாரத்துக்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.