அதிமுகவில் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுக்குழுவைக் கூட்டுவதற்காக சி.வி.சண்முகம் தரப்பு சுமார் 1000 பொதுக்குழு உறுப்பினர்களிடம் ரகசியமாகக் கையெழுத்து வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மூத்த கட்சி நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகளிலும் சி.வி.எஸ் தரப்பு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு புறம், எடப்பாடி பழனிசாமி (EPS) – ஆளுநர் இடையேயான சந்திப்பு தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருக்கும் நிலையில், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, தேவைப்பட்டால் இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) நாடும் வகையில் ஒரு வலுவான ‘பிளான் B’ திட்டத்தையும் இ.பி.எஸ் தரப்பு தயார் செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
