சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல பிளான் போட்ட தம்பதி… ஆசை காட்டி மோசம் செய்த டிராவல்ஸ் ஏஜென்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சான்காடு முகிலன் கரை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் மாலத்தீவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜாய்ஸ். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரவீன், அவரது மனைவி உறவினர்கள் நான்கு பேர் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் 2 தவணைகளாக 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் திருவனந்தபுரத்திற்கு சென்ற பிரவீன் வெளிநாடு பயணத்திட்டம் குறித்து கேட்டபோது அந்த நிறுவனத்தினர் சரியாக பதில் கூறவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. இதுகுறித்து பிரவீன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் டிராவல்ஸ் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி செய்தது உறுதியானது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

3 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

5 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

6 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

11 minutes ago

“என் ஜாதகம் பார்த்தாச்சு”… இனி நடக்கப்போவது இதுதான்…. எதிரிகளை அதிரவைத்த தவெக வேட்பாளர் கனிமொழி….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க…

14 minutes ago

அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரேமலதா… புதிய குண்டை தூக்கிப்போட்ட அன்புமணி…. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் மிகக் கடுமையாகச்…

21 minutes ago