தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படுவது மட்டுமல்லாமல் மற்ற திறன்களையும் ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டின் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் அளவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகின்ற ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையும், குறுவட்ட மலையில் ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 29 வரையும், வட்டாரம் அளவில் அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையும், மாவட்ட அளவில் அக்டோபர் 27 முதல் அக்டோபர் 31 வரையும், மாநில அளவில் நவம்பர் 24 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரையும் கலைத்திருவிழா நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
