இனி யாரும் இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது… Google, Apple நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு..!

By Nanthini on ஆடி 26, 2025

Spread the love

வாஷிங்டனில் நடைபெற்ற ஏ ஐ உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நீண்ட காலமாகவே அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்களை பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடைமுறை லட்சக்கணக்கான அமெரிக்கர்களை பெரிதும் பாதித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அங்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்து விட்டன.

அது மட்டுமல்லாமல் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததும் நடந்தது. Google, மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கா வழங்கக்கூடிய சுதந்திரத்தை பயன்படுத்தி அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இனி அப்படி எதுவும் நடக்க விடமாட்டேன். அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் கட்டுவதையும் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் இத்தோடு விட்டுவிட்டு உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.