நாளை முதல் இந்தியாவில் ரயில் கட்டணங்கள் உயர்வு அமலுக்கு வருகிறது. கூடுதல் ரயில்களையும் இந்திய ரயில்வே இயக்க உள்ளது. இந்தியாவில் டிசம்பர் 26 நாளை முதல் புதிய கட்டண கட்டமைப்பை இந்திய ரயில்வே அமல்படுத்துகின்றது. இதன் மூலமாக 600 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்றும் ரயில்வே எதிர்பார்க்கிறது. சாதாரண வகுப்பு பயணிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா கூடுதலாக வசூல் செய்யப்படும்.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா கூடுதல் வசூலிக்கப்படும். 215 கிலோ மீட்டருக்கு குறைவான பயணங்களுக்கு கட்டண உயர்வு கிடையாது. 500 km தூரம் செல்லும் சாதாரண வகுப்பு பயணிகளுக்கு பத்து ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளின் கட்டணத்தை இந்திய ரயில்வே உயர்த்தவில்லை.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…