பண்டிகை காலங்களில் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வருகின்றனர். பெரும்பாலானோர் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் விற்பனை 10 நிமிடங்களில் 90% நிறைவு பெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ஆம் தேதி ரயில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் சுமார் 10 நிமிடங்களிலேயே சாதாரண வகுப்பு கொண்ட ரயில்களில் டிக்கெட் நிறைவடைந்தது. உயர் வகுப்பு பெட்டிகள் கொண்ட ரயில்களில் மட்டும் டிக்கெட்டுகள் உள்ளது.
