இந்தியாவைப் பொறுத்தவரையில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். அப்படி ரயில் பயணத்தில் பக்கவாட்ட இருக்கை பயணிகளுக்கு எப்போதுமே பிரியமானதாக இருக்கும். இந்த இடத்தை பாதுகாப்பதற்கு ஒரு இளைஞர் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அதை யாரிடமும் கொடுக்காமல் பாதுகாத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு ரயிலில் தன்னுடைய முன்பதிவு செய்யப்பட்ட பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளைஞரிடம் இரவு 12 மணிக்கு ஒரு தம்பதி வந்து இருக்கையை மாற்ற கேட்டுள்ளனர். அதில் ஒரு பெண், நீ மேலே போ தம்பி என்று கூறியுள்ளார்.
உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அந்த இளைஞர், எனக்கு உடல்நிலை சரியில்லை, வாந்தி வந்தால் கீழே இறங்க முடியாது என்று நிதானமாக விளக்கி கூறியுள்ளார். இதனால் எந்த ஒரு தகராறும் இல்லாமல் அந்த பெண் மேல் படுக்கைக்கு சென்று விட்டார். இது தொடர்பான அனுபவத்தை அவர் ஒரு பதிவில் பகிர்ந்த நிலையில் நெட்டிசன்கள் சரியான மூளை பயன்பாடு தான் என பாராட்டி வருகிறார்கள். பயணத்திற்கு முன்பு பிளான் பண்ணி சூழ்நிலைக்கு ஏற்றவாறு பதில் சொல்லினால் நம் அமரும் இடம் பாதுகாப்பாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
