“ஐயோ இப்படி ஆயிடுச்சே….”! பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு…!

By Srimathi on ஆவணி 29, 2025

Spread the love

டெல்லியில் புதன்கிழமை காலை 7:30 மணிக்கு, தனது மின் ரக்ஷாவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 8 வயது மாணவி அன்ஷிதா பராஷர் உயிரிழந்தார். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பள்ளி மாணவி சென்று கொண்டிருந்த இ-ரிக்ஷா முதலில், பைக் ஒன்றின் மேல் மோதி, பின்னர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பல பள்ளி குழந்தைகளும், ஒரு ஆசிரியரும், ரிக்ஷா ஓட்டுநரும் அந்த ரிக்ஷாவில் இருந்தனர். அன்ஷிதா வாகனத்தின் அடியில் நசுங்கி பலத்த காயமடைந்த நிலையில், அங்குள்ளவர்கள் அன்ஷிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் உரிமம் இல்லாமல் இ-ரிக்ஷாவை ஓட்டுவதாகவும், அவற்றை மைனர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்கள் ஓட்டுவதாக அன்ஷிதாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இ-ரிக்ஷாவின் ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் ரிக்ஷா ஓட்டுனரை தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, ரிக்ஷாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

https://video-aajtak.tosshub.com/aajtak/video/2025_08/28_aug_25_e_riksha_1756399825246_512.mp4#t=0.5