ரயிலில் அசந்து தூங்கிய நபர்…. நைசாக செல்போனை உருவிய காவல் அதிகாரி… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகள் தங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் அந்த வீடியோவில், காவலர் ஒருவர் ரயிலில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணியின் சட்டை பையில் இருந்து அவருக்குத் தெரியாமல் செல்போனை எடுத்து விடுகிறார். சிறிது நேரம் கழித்து அந்தப் பயணி கண் விழித்த போது தன்னுடைய போனை தேடி பதட்டம் அடைகிறார். உடனே அங்கிருந்த காவலர் அவருக்கு செல்போனை திருப்பிக் கொடுத்து, பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

இந்த காணொளி மூலமாக ரயிலில் உறங்கும் போது செல்போன் அல்லது விலை உயர்ந்த பொருட்களை அஜாக்கிரதையாக வைப்பது திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதை உணர முடிகிறது. தங்களுடைய உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ எடுத்துரைக்கிறது. மேலும் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரயில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய அந்த காவலருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Ritu Raj Choudhary பதிவைப் பகிர்ந்துள்ளார் (@choudhary0409)