கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்சனா பகுதியை சேர்ந்த வினோதினி (9) என்ற சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது வலது காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனே பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவர்கள் கையில் மாவு கட்டு போட்டு உள்ளனர். பிறகு சிறுமியின் கையில் வீக்கம் ஏற்பட்டதோடு நீர் கட்டி உள்ளது. இதனால் சிறுநீர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுமியின் வலது கையை முழங்கை வரை வெட்டி அகற்றி உள்ளதாக தெரிகிறது.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். இந்த சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக சிறுமை தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மருத்துவரின் அலட்சியத்தை வெளிப்படுத்தியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
