காலையிலேயே ஷாக் நியூஸ்..! ரயிலில் லக்கேஜ்களுக்கான கட்டணம் உயர்வு… ரயில்வே அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று  அன்று மக்களவையில் ரயில்களில் பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கான கட்டண முறைகள் குறித்து விளக்கமளித்துள்ளார். விமான நிலையங்களில் இருப்பதைப் போலவே, ரயில்களிலும் நிர்ணயிக்கப்பட்ட இலவச அளவைத் தாண்டி லக்கேஜ் கொண்டு சென்றால், 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • AC ஃபர்ஸ்ட் கிளாஸ்: 70 கிலோ வரை இலவசம்; கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 150 கிலோ வரை கொண்டு செல்லலாம்.
  • ஃபர்ஸ்ட் கிளாஸ் & AC 2 டயர்: 50 கிலோ வரை இலவசம்; அதிகபட்சம் 100 கிலோ வரை அனுமதிக்கப்படும்.
  • AC 3 டயர் / சேர் கார்: 40 கிலோ வரை இலவசம். (இதுவே இவற்றுக்கான அதிகபட்ச வரம்பாகும்).
  • ஸ்லீப்பர் (SL): 40 கிலோ வரை இலவசம்; கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 80 கிலோ வரை கொண்டு செல்லலாம்.
  • செகண்ட் கிளாஸ்  : 35 கிலோ வரை இலவசம்; கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 70 கிலோ வரை கொண்டு செல்லலாம்.  லக்கேஜ்களை முன்பதிவு செய்யாமல் கொண்டு சென்று, சோதனையில் பிடிபட்டால் சாதாரண கட்டணத்தை விடப் பல மடங்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது