பால் மற்றும் பால் பொருட்கள் கலப்படம்… நாடு முழுவதும் பறந்த உத்தரவு…!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love

நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களில் அதிகரித்து வரும் கலப்படத்தைத் தடுக்க, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் சிறப்பு அமலாக்கப் பணிகளை (Special Enforcement Drive) உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக பனீர் மற்றும் கோவா (Khoa) ஆகிய பால் பொருட்களில் அதிகப்படியான கலப்படம் மற்றும் தவறான பிராண்டிங் (Misbranding) செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, இவற்றைத் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் தீவிர ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தரம் குறைந்த மூலப்பொருட்களைக் கொண்டும், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டும் பால் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.