TRAI

ஆன்லைன் மோசடிகளை தடுக்க புதிய யுக்தி… புதிய OTP விதிகளை அமல்படுத்தும் TRAI…

By admin on கார்த்திகை 24, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் யாரும் கையில் பணம் எடுத்துக் கொண்டு செல்வதில்லை. எல்லாமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான். ஷாப்பிங் என்றாலும் டூர் என்றாலும் ஏன் சிறிய கடையில் ஒரு பத்து ரூபாய் 50 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட ஃபோனில் ஸ்கேன் செய்துதான் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். ஆனால் இதை சந்தர்ப்பமாக கொண்டு பல மோசடிகளும் நடக்கின்றது.

   

இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வேலைகள் எளிதாக நடந்தாலும் அதற்கு ஏற்ப மோசடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைனில் மூலம் பணத்தை இழந்தவர்கள் பலர். ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் TRAI புதிய மாற்றங்களையும் நடவடிக்கையும் எடுப்பதாக அறிவித்திருக்கிறது.

   

ஆன்லைன் மோசடியை தடுக்க TRAI தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு Tracabilityயை செயல்படுத்துமாறு அறிவுறுத்தி இருக்கிறது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் போது பரிமாறப்படும் OTP களை கண்காணிக்கும் வகையில் Tracabiity விதிகளை நடைமுறைப்படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியிருந்தது.

 

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு OTP மெசேஜ் Tracability யை செயல்படுத்த TRAI அக்டோபர் 31 வரை அவகாசம் கொடுத்திருந்தது. ஜியோ ஏர்டெல் விஐ பி எஸ் என் எல் ஆகியவற்றின் கோரிக்கையை தொடர்ந்து இந்த காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டித்திறந்தது. அதன் காலக்கெடு இந்த நவம்பர் உடன் முடிய உள்ள நிலையில் இனி டிசம்பர் 1 முதல் தொலைதொடர்பு நிறுவனங்கள் வணிக செய்திகளுக்கு பரிமாற்றப்படும் OTP செய்திகளை கண்காணிக்கும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.