தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் கடைசியாக கோட் படத்தில் நடித்து முடித்த நிலையில் தளபதி 69 படத்தில் மட்டும் அடுத்து நடித்து விட்டு அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தாலும் மறுபுறம் அரசியலில் இறங்கியுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

#image_title
இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் கடந்த மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சோப லட்ச கூட்டம் வந்து அலைமோதியது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். இதனால் விஜய் அரசியலில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார்.

#image_title
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு விதமான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னதாக விஜய் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கி கௌரவப்படுத்தினார். தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய பாவா லட்சுமணன், நாங்க எல்லாரும் ஒரு படத்தின் ஷூட்டிங்க்கிற்கு ஊட்டிக்கு கிளம்பினோம்.
)
விஜய் அப்பா SAC சார் சொன்னாரு என் பையன்கிட்ட மட்டும் காரை கொடுக்காதீங்க. அவன் ரொம்ப ஸ்பீடா ஓட்டுவான் சார். அதனால் தயவு செஞ்சி அவன்கிட்ட மட்டும் காரை குடுக்காதீங்கன்னு சொன்னார். அவ்வளவு PERFECT ஆன மனிதர் எஸ்.ஏ சந்திரசேகர் என்று கூறியுள்ளார்.
