“நீ இனிமே உயிரோட இருக்கக்கூடாது”…. மது போதையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவன்… பெங்களூருவில் அரங்கேறிய நள்ளிரவு பயங்கரம்….!

By Nanthini on மாசி 22, 2026

Spread the love

பெங்களூரு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், கல்லை தலையில் போட்டு அவரை கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கக்கலிபுரா காவல் எல்லைக்குட்பட்ட குல்லேகௌடனபாளையத்தில் வசித்து வந்தவர் 21 வயதான சிஞ்சனா. இவரது கணவர் ரேணுகையா, தனது மனைவியின் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு அவருடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த ரேணுகையா, மீண்டும் சிஞ்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் எல்லை மீறிய நிலையில், வீட்டின் முன்னே கிடந்த பெரிய கல்லை எடுத்து சிஞ்சனாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையைச் செய்த கையோடு ரேணுகையா அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கக்கலிபுரா காவல்துறையினர், சிஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கணவர் ரேணுகையாவை பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்ப தகராறில் இளம்பெண் ஒருவரின் உயிர் இவ்வளவு கொடூரமான முறையில் பறிபோனது அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.