தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாராவிற்கு நடந்த துயரமான சம்பவம்…!!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்…!!!

By Begam on புரட்டாதி 7, 2022

Spread the love

தொகுப்பாளினி அர்ச்சனா ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சிக்கு சென்ற இவர் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டு கல்யாணம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிர்ஷ்ட லட்சுமி, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களிடம் இருந்து பல விமர்சனங்களை பெற்றார்.

   

   

இவர் இந்திய கடற்படையில் பணியாற்றும் தளபதி வினித் முத்துகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரா என்று ஒரு மகள் உள்ளார் .புதிதாக ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து  வழங்க இருக்கிறார். இவருடன் அவரது மகளும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

 

தற்சமயம்  தொகுப்பாளினி அர்ச்சனா தன்னுடைய மகளுடன் இணைந்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் சாரா கூறியதாவது  ‘நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு ஃப்ரெண்ட்ஸே  கிடையாது. என்னுடைய ஒரே ஒரு  ஃப்ரெண்ட் என்னோட அம்மா மட்டும் தான்’ என்று அவர் மன வேதனைடன் கூறி இருந்தார் .

’15 வயதில் மீடியாவில் இருப்பதால் ஃப்ரெண்ட்ஸே கிடையாது என்பது மிகப்பெரிய கஷ்டமான விஷயம் தான். இந்த கஷ்டத்தை அவள் அனுபவத்திருக்கிறாள். நான் எப்பொழுதும் அவளுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டாக இருப்பேன் ‘என்று மகளிடம் அம்மா கூறியது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. அதோடு அவர்களுக்கு ரசிகர்கள் ஆறுதலும் கூறி வருகின்றனர்.