அழகுக்கே அழகு சேர்ப்பது போல தேவதையாய் ஜொலிக்கும் நடிகை சினேகா…!!! வீடியோ உள்ளே…!!!

By Begam

Published on:

நடிகை சினேகா ‘என்னவளே’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஆனந்தம்’ படத்தில் நடித்தார். இப்படத்தில் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடலில் நடித்து  பிரபலமடைந்தார்.

   

புன்னகை தேசம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் ,வசூல்ராஜா எம் பி பி எஸ், புதுப்பேட்டை, நான் அவனில்லை ,பிரிவோம் சந்திப்போம், சிலம்பாட்டம், பொன்னர் சங்கர், கோவா, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்று இவர் நடிப்பில் வெளியான படங்கள் ஏராளம்.

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குழந்தைகளுக்கு விஹான் ,ஆத்யந்தா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

தற்பொழுது ஜீ தமிழின்  பிரபல நிகழ்ச்சியான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் நடுவராக சினேகா பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக அவர் மேக்கப் போட்டு ரெடி ஆகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=JqDYS2LdXAE

author avatar