ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 6, 2026

Spread the love

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று ரித்திக் என்ற அந்த சிறுவன், தன் சகோதரியுடன் சேர்ந்து மொபைல் போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது சகோதரி போனைப் பிடுங்கியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பெற்றோர் இருவருமே வீட்டில் இல்லை.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுவன் அறையில் சடலமாக மீட்கப்பட்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தடம் அறிவியல் குழுவினரும் விசாரணையைத் தொடங்கினர். சிறுவனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

   

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஜாலான் காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் குமார் சிங், குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தும் முறை மற்றும் நேரத்தைக் கண்காணிப்பதில் பெற்றோர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.