ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 6, 2026

Spread the love

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் அருகிலிருந்த பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். மேலும், வாகனம் வெடித்த அதிர்வில் அப்பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டதால், பொதுமக்கள் பீதியடைந்து வீதிகளில் அலறியடித்து ஓடினர்.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தத் தொடர் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில், நிறுத்தப்பட்டிருந்த காரில் முதலில் லேசாக தீப்பற்றி எரியத் தொடங்கி, சில நொடிகளிலேயே அக்னி பிழம்பாக மாறியது. அதனைத் தொடர்ந்து, சற்றும் எதிர்பாராத வகையில் காரின் எரிபொருள் உருளை மிகவும் சக்திவாய்ந்த முறையில் வெடித்துச் சிதறியது காட்சியளிக்கிறது.

   

https://twitter.com/nextminutenews7/status/2118380093894717853/video/1

   

இந்த அதிதீவிர வெடிப்பின் வீரியத்தால் காரின் இரும்பு பாகங்கள் மற்றும் உடைந்த உலோகத் துண்டுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு, அருகில் நின்றிருந்த பொதுமக்கள் மீது பலமாகத் தாக்கின. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தியதுடன், காயமடைந்தவர்களை மீட்புப் பணிகள் மூலம் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.