திக்… திக்… திக்… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிச்ச டிராக்டர்… கைநீர் இறைப்பானில் குளித்த… இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on ஐப்பசி 26, 2026

Spread the love

ஜான்பூர் மாவட்டம், பக்ஷா காவல் எல்லைக்குட்பட்ட தரியாகஞ்ச் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கைநீர் இறைப்பான் அருகில் 30 வயதான சஞ்சய் யாதவ் என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஒன்று, எதிர்பாராதவிதமாக சஞ்சய் யாதவ் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் டிராக்டரின் சக்கரங்களில் சிக்கி சஞ்சய் யாதவ் பலத்த காயமடைந்து நசுக்கப்பட்டார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

   

https://twitter.com/vishalsonkarjnp/status/2114325981339234804/video/1

   

இளைஞரின் இந்த எதிர்பாராத மறைவுச் செய்தி கேட்டதும் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் அதன் ஓட்டுநர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.