கையெழுத்து போட மாட்டியா?… அம்மாவை மிரட்டிய கொடூரன்… குறுக்கே வந்த மகனுக்கு நெஞ்சைப் பிளக்கும் பயங்கரம்… ஹைதராபாத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 26, 2026

Spread the love

ஹைதராபாத்தில் சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற கொடூரச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். ஹுசைனி ஆலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கபூதர் கானா பகுதியில் சனிக்கிழமை மதியம் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த இளைஞர் மதுர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, சொத்து தொடர்பான சில ஆவணங்களில் மதுர் சிங்கின் தாயாரான மனிஷாவிடம் கையொப்பம் வாங்குவதற்காகக் குற்றவாளி வீட்டிற்கு வந்துள்ளார். இருப்பினும், அந்த ஆவணங்களில் கையொப்பமிட மனிஷா மறுத்ததால், இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

   

https://twitter.com/nawababrar131/status/2114024032802943312/video/1

   

தாயாருடன் குற்றவாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டு, அவரைக் காப்பாற்றுவதற்காக மதுர் சிங் உடனடியாக நடுவில் தலையிட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த குற்றவாளி, தான் வைத்திருந்த கத்தியால் மதுரைச் சரமாரியாகக் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.