ஐயோ பாவம்… மருந்தை வாயில ஊத்துன அடுத்த கணமே கண்ணை மூடிட்டான்… 4 மாதப் பிஞ்சு பரிதாப பலி… கதறித் துடிக்கும் பெற்றோர்… சூர்யபேட்டில் பெரும் பரபரப்பு…!!

By Swetha on புரட்டாதி 5, 2026

Spread the love

சூர்யபேட் மாவட்ட மையத்தில் சளி சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. யந்தலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமு மற்றும் ப்ரீத்தி தம்பதியினரின் நான்கு மாதக் குழந்தைக்குச் சளி பிடித்திருந்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் டாக்டர் மகேந்தர் ரெட்டி குழந்தையைப் பரிசோதித்து, சில மருந்துகளையும் சிரப்புகளையும் பரிந்துரைத்துள்ளார். மருத்துவர் கொடுத்த பரிந்துரையின்படி பெற்றோர் குழந்தைக்கு மருந்துகளைக் கொடுத்துள்ளனர். ஆனால், மருந்தைக் கொடுத்த சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

   

தவறான மருத்துவம் மற்றும் வீரியமிக்க மருந்துகள் காரணமாகவே தங்களின் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையின் இறப்பிற்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.