உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் சிவ்பூர் பகுதியில் ‘திங்கோ’ மற்றும் ‘குங்ரூ’ என்ற இரு தெரு நாய்களை அவினாஷ் சந்திர சின்ஹா என்பவர் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார். இதைத் தட்டிக் கேட்ட நாய்களின் பராமரிப்பாளரான டாக்டர் ஆகாங்ஷா சிங்கிடம், “இந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்களையும் சுட்டுக் கொன்றுவிடுவேன்” என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் கழுத்து மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இரு நாய்களும் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டன. இச்சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்களும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் கவனத்திற்குக் கொண்டு சென்றதை அடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
https://www.instagram.com/reel/Dc3YLjwSvSb/?utm_source=ig_web_copy_link&igsi=NTc4MTIwNjQ2YQ==
பீட்டா அமைப்பின் முயற்சியால், வாரணாசி காவல் துறை அவினாஷ் சந்திர சின்ஹா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 325 மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், விலங்குகளைத் துன்புறுத்துபவர்களுக்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும் எனப் பீட்டா வலியுறுத்தியுள்ளது.
