“ஒரு நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு!”… கனமழை வைத்த மரண ட்விஸ்ட்… இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

By Gayathri on ஐப்பசி 1, 2026

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில், கிணறு தோண்டும் பணியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக, கிணற்றின் அருகே தோண்டி வைக்கப்பட்டிருந்த மண் குவியலானது அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இன்று வழக்கம் போல் மூன்று இளைஞர்கள் கிணற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது, மேலே குவித்து வைக்கப்பட்டிருந்த அந்த ஈரமண் திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது.

இந்த கோர விபத்தில் மண்ணுக்குள் புதையுண்ட செல்வமணி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இவர்களுடன் வேலை செய்த மற்றொரு இளைஞரை அங்கிருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டு, சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.