ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் மாயமானார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாணவியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், மாணவியின் இல்லத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வனப்பகுதியின் முட்புதரில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலத்தில் கொடூரக் காயங்கள் காணப்பட்டதோடு, கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மர்ம நபர்கள் மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசிச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலிருந்து முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
