அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

By Gayathri on ஐப்பசி 20, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், தனது இரண்டு பள்ளி செல்லும் மகன்கள் மற்றும் மாமனாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், மகன்களைத் திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பின்னர், பிபாரியா ரயில் நிலையத்திற்குச் சென்ற அஜய், அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு தண்டவாளப் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த விரைவு ரயில் முன்பு திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் அவரது சடலத்தைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

   

அவரது காரை சோதனையிட்டபோது, போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மகன்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் அவரும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.