கேரள மாநிலம் கண்ணூர் அடுத்துள்ள சொவ்வாய் பகுதியை சேர்ந்தவர் சங்கீத்[ 20]. இவர் சமூக வலைத்தளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். பின்பு நெருங்கி பழகியும் வந்துள்ளனர். இதற்கிடையே அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி கண்ணூரில் இருக்கும் விடுதி ஒன்றிற்கு சங்கீத் வரவழைத்துள்ளார். அதன்படி சிறுமி வந்தவுடன் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த அறைக்கு சிறுமியை சங்கீத் அழைத்துச் சென்றுள்ளார். அச்சமயம் , சங்கீத்தின் இரண்டு நண்பர்களான ஆனப்பாலம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(20) என்றவனும் வைத்தியர் பீடிகை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என்ற இருவரையும் அறைக்கு வரவழைத்துள்ளான் சங்கீத்.
சிறுமிக்கு விடுதியில் குளிப்பானம் கொடுத்து உள்ளார்கள். அதை குடித்த உடன் மயங்கிப்போன சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதைக் குறித்து சிறுமி கண்ணூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கொடேரி தலைமையில் விசாரணை நடத்தியுள்ளனர். அச்சிறுமிடம் காதல் வயப்பட்டது போல நடித்து விடுதிக்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கீத், அபிஷேக் , ஆகாஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து கண்ணூர் கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
