#image_title
கேபி சுந்தராம்பாள் ஒரு நாடக நடிகையாக, பாடகியாக, அரசியல்வாதியாக பல பரிணாமங்களை கொண்டவர். ஈரோடு மாவட்டம் கொடுமுடிதான் அவரது சொந்த ஊர். வறுமையான குடும்பத்தில் 1908ம் ஆண்டில் பிறந்த அவருக்கு 2 தங்கைகள், ஒரு தம்பி. சிறுவயதில் தந்தையை இழந்த நிலையில் அவரது குடும்பமே தாய்மாமா ஆதரவில் வாழ்ந்தது. சிறுமியாக இருக்கும்போதே கணீர் குரலில் பாடல்களை பாடி அசத்தியவர் கேபி சுந்தராம்பாள். ஒருமுறை ரயிலில் சென்றபோது வேலு நாயர் என்பவர் அவர் பாடியதை கேட்டு மகிழ்ந்து நாடகத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் பல நாடகங்களில் பாடி, நடித்து ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார் கேபி சுந்தராம்பாள். அதன்பின் கேஜி கிட்டப்பா என்பவருடன் இலங்கையில் நடந்த வள்ளி திருமணம் நாடகத்தில் வேலன், வள்ளியாக இருவரும் நடித்தனர். ஜோடிப்பொருத்தம் பிரமாதம் என இலங்கை முழுவதும் நாடக ரசிகர்கள் பேசினர்.
#image_title
இதன்பிறகு தமிழ்நாட்டிலும் பல நாடகங்களிலும் கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஜோடியாக நடித்த நிலையில் ஒருகட்டத்தில் இருவரும் திருமண வாழ்வில் இணைய முடிவு செய்தனர். கிட்டப்பா மலையாளி, கேபி சுந்தராம்பாள் கவுண்டர் என்பதால் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கேபிஎஸ் பிடிவாதம் காரணமாக. அவரது திருமணத்துக்கு சம்மதித்தனர். 1927ம் ஆண்டில் மாயவரத்தில் திருமணம் நடந்தது. கிட்டப்பாவுக்கு 2வது திருமணம் என்பதால், கடைசி வரை என்னை கைவிட்டு விடக்கூடாது என சத்தியம் வாங்கிதான் இந்த திருமணத்துக்கே சுந்தராம்பாள் சம்மதித்தார். திருமணமாகி சில ஆண்டுகளில் ஆண்குழந்தை பிறந்து இறந்து போனது. அதன்பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். குடிபோதைக்கு அடிமையாக கிட்டப்பா 1933ல் இறந்து போனார். தனது 25 வயதில் விதவையான கேபிஎஸ் இனிமேல் என் வாழ்நாளில் எந்த ஆண்களுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என துறவற வாழ்க்கைக்கு மாறி. வெள்ளை புடவை அணிந்து நெற்றியில் திருநீறு பட்டையுடன் ஒரு துறவியாக வாழத் துவங்கினார்.
#image_title
இந்த சூழலில் 1931 முதல் நாடகங்களை எல்லாம் திரைப்படங்களாக்கிய நிலையில், நந்தனார் என்ற படத்தில் நடிக்க, கேபிஎஸ்சின் அரசியல் குருநாதர் சத்யமூர்த்தி மூலம் அழைப்பு வந்தது. அதிக சம்பளம் கேட்டால் நடிக்க அழைக்க மாட்டார்கள் என நினைத்து கேபிஎஸ் அந்த படத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். அதாவது 1934ல் அந்த ஒரு லட்சம் ரூபாய், இப்போது ரூ. 25 கோடிக்கு சமம். இதையடுத்து அதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ள நந்தனார் படம் பெரிய ஹிட் ஆனது. இதில் இடம்பெற்ற 41 பாடல்களில் 19 பாடல்களை கேபிஎஸ் பாடினார்.
#image_title
அதன்பின் மணிமேகலை, பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, திருமலை தெய்வம், காரைக்கால் அம்மையார் என 13 படங்களில் நடித்தார். ஒருமுறை ஈரோட்டுக்கு வந்த மகாத்மா காந்தியடிகள், கேபி சுந்தராம்பாள் வீட்டுக்கு வருகை தந்தார். அவருக்கு தங்க தட்டில் சுந்தராம்பாள் உணவு பரிமாறினார். அந்த தங்க தட்டை கேபிஎஸ்சிடம் கேட்டு வாங்கிய காந்தியடிகள், அங்கேயே ஏலம் விட்டார். அந்த ஏலத்தில் வந்த பணத்தை காங்கிரஸ் கட்சிக்கு நிதியாக தந்தார். அதன்பின் கேபிஎஸ் சுந்தராம்பாளை அரசியலுக்கு அழைத்தார். அதன்பிறகு காங்கிரஸ் மேடைகளில் கேபிஎஸ் தேச பக்தி பாடல்களை பாடினார். எம்பியாகவும் இருந்த அவர், 1980ம் ஆண்டில் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…
திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…