“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26 வயதான நிஷாத் பாத்திமா என்ற ஆசிரியை வழக்கம்போல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது பையில் ரகசியமாகத் துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்டு பள்ளிக்குள் புகுந்த முகமது சௌத் அன்சாரி (27) என்ற வாலிபன், ஆசிரியை பாத்திமாவை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து மாடிப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளான். சிறு குழந்தைகள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கண்முன்னே அச்சிறுமி தப்பியோட முயன்றும், சௌத் அவரை விடாமல் இழுத்துச் சென்று தனது பையிலிருந்த துப்பாக்கியை எடுத்து பாத்திமாவின் தலையிலேயே நேருக்கு நேராகச் சுட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்தான்.

அடுத்த வினாடியே தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது தலையிலும் சுட்டுக் கொண்டு தானும் சம்பவ இடத்திலேயே பலியானான். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே இக்கொடூரச் சம்பவம் நடந்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பிஞ்சு குழந்தைகள் பார்க்கும்போதே ஆசிரியை சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“இனி வங்கிக் கணக்கு செல்லாது”… தமிழகம் முழுவதும் உதவித்தொகை நிறுத்தம்?…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மாதாந்திர உதவித்தொகை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 4 அல்லது 5-ஆம் தேதிக்குள்…

3 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

1 மணத்தியாலம் ago

“அலறிய 3 மாத கர்ப்பிணி மனைவி…” கழுத்தை அறுத்து கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…

2 மணத்தியாலங்கள் ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

2 மணத்தியாலங்கள் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

2 மணத்தியாலங்கள் ago