கோயம்புத்தூர் பூ மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பெண்கள் வந்து பூ வாங்கி செல்கின்றனர். நேற்று சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பூ வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அவர் ஸ்லீவ் லெஸ் சுடிதார் அணிந்திருந்ததை பார்த்த கடை உரிமையாளர் இப்படியெல்லாம் உடை அணிந்து வரக்கூடாது என கூறியதால் மாணவி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அந்த மாணவி “உடை சரியாக தான் இருக்கிறது. உங்களது பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். இதனை அந்த பெண்ணுடன் வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த சமயம் பூ மார்க்கெட்டில் இருந்த மற்ற வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து மாணவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாணவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
