பிரபல நடிகர் சுமீத் ராகவன் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தட்டாபானி வெந்நீர் ஊற்றுப் பகுதிக்குச் சென்றபோது, அங்கு சுற்றுலாப் பயணிகள் குப்பைகளைக் கொட்டிச் சென்றதைக் கண்டு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட வீடியோவில், பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பாதையில் சிதறிக் கிடப்பதைக் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
தான் வந்த குழுவினருடன் சேர்ந்து தங்களால் இயன்றவரை குப்பைகளைச் சேகரித்து பைகளில் அடைத்த போதிலும், அப்பகுதி முழுவதும் இன்னும் ஏராளமான கழிவுகள் கொட்டிக்கிடப்பதாக சுமீத் கூறியுள்ளார். இத்தகைய இயற்கை அழகும் சூழியல் முக்கியத்துவமும் கொண்ட இடங்களை நாசமாக்குவது மிகவும் வெட்கக்கேடானது என்றும், குடிமைப் பொறுப்பு இல்லாதது இந்தியர்களின் இயல்பிலேயே உள்ள ஒரு குறைபாடு என்றும் அவர் காரசாரமாகக் சாடியுள்ளார்.
https://www.instagram.com/reel/DeM1PcuNSyg/?utm_source=ig_web_button_share_sheet
மக்களாகவே திருந்தி குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க மாட்டார்கள் என்பதால், இமாச்சலப் பிரதேச அரசு மற்றும் காவல்துறை இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அபராதங்களை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து, சுற்றுலாத் தலங்களின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
