ஆசை ஆசையாய் நடந்த திருமணம்.. ஹனிமூன் சென்ற இடத்தில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நாட்டை உலுக்கிய சம்பவம்..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் இந்து உரை சேர்ந்த ராஜா ரகுவஞ்சி என்ற தொழிலதிபருக்கும் சோனம் என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. மணப்பெண்ணின் தந்தை இந்தூரில் பிளேவுட் கடை வைத்து நடத்தி வருகின்றார். இப்படியான நிலையில் புதுமண தம்பதிகள் இருவரும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஹனிமூன் க்கு இருவரும் கடந்த மாதம் 20ஆம் தேதி மேகாலயா சென்ற நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த தம்பதி 22ஆம் தேதி கிழக்கு காலீஸ் ஹீல்ஸ் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளத்திற்கு கூட்டலில் சென்று உள்ளனர். அங்குள்ள ஒரு கிராமத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மலை கிராமத்திற்கு நடந்து சென்றனர். மலை ஏறுவதற்கு வழிகாட்டி உதவியுடன் சென்றபோது மாலை வெகு நேரம் ஆனதால் அங்கிருந்த ஒரு கிராமத்தில் தம்பதியினர் தங்கி உள்ளனர். அதன் பிறகு மலை கிராமத்திற்கு நாங்களே தனியாக சென்று விடுகிறோம் என்று மலையேற்ற வழிகாட்டி இடம் கூறிய நிலையில் அவரும் இருவரையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இப்படியான நிலையில் மறுநாள் புதுமண தம்பதியான ராஜா ரகு வஞ்சி மற்றும் சோனம் ஆகியோரின் செல்போனியன்கள் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தம்பதி ஓட்டி வந்த ஸ்கூட்டர் அங்கிருந்த ஒரு சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 11 நாட்கள் கழித்து புது மாப்பிள்ளை சடலமாக மீட்கப்பட்டார். அங்கிருந்த ஒரு பள்ளத்தாக்கில் அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டு அவருடைய மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

   

அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் கணவர் ராஜாவை புதுமணப்பெண் சோனம் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதாவது அவருக்கும் அவருடைய தந்தை நடத்தி வரும் கடையில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்த நிலையில் சோனத்திற்கு ராஜா ரகு வஞ்சியுடன் திடீரென திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத சோனம் தன்னுடைய கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை தீர்த்து கட்டமிட்டு அடியாட்களுக்கு பணம் கொடுத்து ஹனிமூன் செல்வது போல நடித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.