“மனிதம் என்றைக்குமே மரித்து போகாது”.. சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஒர்த்தா? இல்லையா?..

By Nanthini on வைகாசி 1, 2025

Spread the love

புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த திரைப்படத்தில் சசிகுமாரின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ள நிலையில் யோகி பாபு, ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஷான்ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் மே 1 உழைப்பாளர் தினமான இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்து விடுகிறார்கள். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

   

ஆனால் அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்து போக விடுகின்றார். அங்கிருந்து சென்னைக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சகஜமான வாழ்க்கையை வாழலாம் என நினைத்தவர்களுக்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டுவர அதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது. அயோத்தி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மனிதத் தன்மையை நிலைநாட்டும் ஒரு கதையை சசிகுமார் தேர்வு செய்து நடித்த இடத்திலேயே பாராட்டுக்களை பெறுகின்றார்.

   

சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படம் எப்படி இருக்கிறது? - சினிமா விமர்சனம் |Tourist  Family Movie Review

 

வில்லியாகவும் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நடிகை சிம்ரனுக்கு இந்த திரைப்படம் சிறப்பான தரமான சம்பவம் என்று தான் சொல்ல வேண்டும். சசிகுமார் மற்றும் சிம்ரனை தாண்டி அவர்களின் மகன்களாக நடித்துள்ள மிதுன் ஜெய்சங்கர் மற்றும் கமலேஷ் என இருவரது நடிப்பும் நன்றாக உள்ளது. படத்தை கடைசி வரை போர் அடிக்காமல் என்டர்டைன்மென்ட் பண்ணி கொண்டு செல்கின்றனர். மனிதன் என்றைக்கும் மரித்துப் போகாது என்பதை அழகாக ஆணித்தனமாக இயக்குனர் தனது சொற்பமான வசனங்களாலும் திறமையான திரை கதையாலும் கையாண்டு உள்ள விதம்தான் படத்திற்கு பெரிய பிளஸ்.

Tourist Family Review: டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்.. மனிதம் என்றைக்குமே  'மரித்து போகாது'! | Tourist Family Review in Tamil: Sasikumar and Simran  plays both fun and emotional - Tamil Filmibeat

இசையும் நன்றாக அமைந்துள்ளது. சசிகுமாரின் கதாபாத்திரம் மட்டும் சற்று எதார்த்தத்தை மிஞ்சி ஓவர் ரைடு பண்ண கதாபாத்திரமாக இயக்குனர் உருவாகி இருப்பது மட்டும் மைனஸ் என்று சொல்லலாம். இலங்கைத் தமிழர் பிரச்சனையை சீரியஸ் ஆக சொல்லப்போகும் படம் போல டிரைலரை காட்டிவிட்டு படம் முழுவதும் ஒரு ஃபன்னாக கொண்டு போன நிலையில் சில இடங்களில் சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் அனைவரும் குடும்பத்துடன் சென்று படத்தை ரசிக்கும் அளவிற்கு படம் நன்றாக தான் அமைந்துள்ளது.