தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் அபிநயா. இவர் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். கேட்கும் திறனின் சற்று குறையுள்ள இவர் தன்னுடைய 17 வயதில் நடிக்க தொடங்கினார். நாடோடிகள் திரைப்படத்திற்கு பிறகு ஈசன் மற்றும் ஏழாம் அறிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பழமொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இதனிடையே மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அபிநயா நடித்திருந்ததை தொடர்ந்து விஷாலை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அபிநயா தவறாக யார் மீதும் பழி போட வேண்டாம் நான் என்னுடைய நீண்ட கால நண்பர் கார்த்திக்கை காதலித்து வருவதாக தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் அண்மையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. இதில் இயக்குனர் சமுத்திரகனி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அபிநயாவை வாழ்த்தினார். இந்நிலையில் அபிநயா சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், என்னால் நம்பவே முடியவில்லை. எங்க திருமணம் ஒரு படத்திற்கான ஷூட்டிங் மாதிரி இருந்தது.

சீக்கிரமே முடிந்து விட்டது போல ஒரு பீல் இருக்கு. ஆனால் மனதுக்கு நிறைவான மகிழ்ச்சி இது தான். திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து அழைக்கும் முதல் பேட்டி இது. திருமணத்திற்கு முன்பு நான் தனியாக எனக்கு பிடித்த பெண்ணாக இருந்தேன். கல்யாணத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக இருக்கிறதை அவரிடம் சொல்லணும். 15 வருஷமா அவர்கூட நான் இருந்திருக்கேன். ஆனால் நிறைய விஷயம் இன்னும் நான் அவர்கிட்ட ஷேர் பண்ணனும். என் கணவருக்கு நிறைய விஷயம் தெரியாது. இந்த நேரத்தில் நான் என்னுடைய அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன். அவங்க கிட்ட நிறைய ஷேர் பண்ணனும் என ஆசையா இருந்தது.

15 வருடமாக இருவரும் நண்பர்களாகவே இருந்து விட்டோம். காதல் என வரும்போது கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.. ஆனால் கார்த்திக் ரொம்பவே ஸ்வீட்டான பர்சன். என்னை பார்த்ததும் கண்டுபிடித்து விடுவார், நான் சோகமாக இருக்கிறேன் அல்லது சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை கண்களாலேயே பார்த்து தெரிந்து கொள்வார். கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பார். பிறகு என்னிடம் வந்து பேசி அதை சரி செய்வார். எல்லோருடைய காதலுக்கும் மொழி தேவைப்படலாம். ஆனால் எங்களுடைய காதலுக்கு மொழியே தேவையில்லை. மனது முழுக்க அன்பும் சிரிப்பும் நிறைந்து உள்ளது என்று தனது கணவர் குறித்து அபிநயா உருக்கமாக பேசியுள்ளார்.
