தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் சசிகுமார். இவர் ஒரு திரைப்பட நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கின்றார். இவருடைய இயக்கத்தில் கலந்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலேயே இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவ்வாறு சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ஈசன் என்ற படத்தை எடுத்தார். அதன் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன.
இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான நந்தன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சசிகுமார் நடிப்பில் அறிமுக நடிகர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த திரைப்படத்தில் சசிகுமார் உடன் சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும் இரண்டு மகன்களுக்கு அம்மாவாகவும் சிம்ரன் நடித்துள்ளார்.
இப்படியான நிலையில் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் யாருமே நடிக்க தயங்கும் ஒரு கேரக்டரில் நீங்கள் எப்படி அப்பாவாக நடித்தீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். அதில், 16 வயது பையன் மற்றும் ஒரு சின்ன பையனுக்கு அப்பாவாக நடித்துள்ளேன். படத்தோட கதையை சொன்னதுமே இந்த படத்தில் நிச்சயம் தமிழ் சினிமாவில் வேற எந்த ஹீரோவும் நடிக்க மாட்டாங்க நான் நடிக்கிறேன் என்று ஓகே சொல்லிட்டேன். தற்போது இருக்கும் ஹீரோக்களில் ஒரு சிலர் மட்டும்தான் அப்பாவாக நடிக்க ஒப்புக் கொள்கின்றனர்.
நிஜத்தில் 25 வயது மகன் இருந்தாலும் கூட படத்தில் அப்பாவாக நடிக்க தயங்குவார்கள். டூரிஸ்ட் ஃபேமிலி கதையை முதலில் என்னிடம் சொல்லவில்லை. பிற ஹீரோக்களிடம் சொல்லி அவர்கள் நடிக்க மறுத்த பிறகு என்னிடம் வந்தது. கதையைக் கேட்டதுமே நான் நடிக்கிறேன் என்று சொல்லிட்டேன். கதை தான் எனக்கு முக்கியம். பல வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் கூட இதுபோன்ற அப்பா கேரக்டர்களில் நடித்து அப்போதே புகழ்பெற்றவர். என்னை பொருத்தவரை எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் நடிக்க தயாராகத்தான் இருக்கிறேன் என்று சசிகுமார் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…