தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தின் உருவான திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், நாசர் மற்றும் சிங்கம் புலி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள நிலையில் 2டி நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே கனிமா மற்றும் கண்ணாடிப் பூவே ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று உலகம் முழுவதும் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் இந்த திரைப்படத்தின் வெற்றியை மலை போல் சூர்யா நம்பி உள்ளார். இப்படியான நிலையில் படம் குறித்த twitter விமர்சனம் வெளியாகி உள்ளது. அதன்படி ரெட்ரோ படத்தில் முதல் பாதி நன்றாக உள்ளது. குறிப்பாக முதல் 30 நிமிட திரைக்கதை நன்றாக அமைந்துள்ளது. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட கன்னிமா பாடல் படத்தை தூக்கி நிறுத்தி உள்ளது.
அதனைப் போலவே இன்டர்வெல் சீன் வெறித்தனமாக உள்ளது. படத்தில் சூர்யா மற்றும் பூஜா ஜோடி மனதை கொள்ளை அடிக்கிறது. கண்ணாடிப் பூவே பாடல் திரையில் பார்க்கும்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்கிறது. காதலும் காமெடியும் முடிந்து அடுத்தடுத்து ஆக்சன் உள்ளது. படம் ரசிகர்களை கவரும் வகையில் கலகலப்பாக நகர்கிறது. சமீப காலத்தில் சூர்யாவின் பெஸ்ட் வெர்ஷனை இந்த படத்தில் பார்க்கலாம். ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் என அனைத்திலும் சூர்யா பின்னி பெடல் எடுத்துள்ளார்.
ஆக்சன் காட்சிகளும் நன்றாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை வேற லெவலில் உள்ளது. ரெட்ரோ படத்தின் முதல் பாதியில் கன்னிமா பாடல் மற்றும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி வேற லெவலில் அமைந்துள்ளது. சூர்யா வழக்கம்போல படத்தில் மாஸ் காட்டியுள்ளார். ஆக மொத்தத்தில் படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவரும் வகையில் நன்றாக உள்ளது எனவும் சூர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் வெறித்தனமாக நடித்துள்ளார் எனவும் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம் எனவும் ரெட்ரோ திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் வந்துள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…