“காப்பாத்துங்க”…. ஜிப்லைனில் உச்சக்கட்ட பயம்… ஆபரேட்டரின் சட்டையைப் பிடித்த சுற்றுலாப் பயணி…. துடிதுடித்து முடிந்த 25 வயது இளைஞனின் வாழ்க்கை….!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சாமுண்டிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் சனூப் (25). இவரது தாயார் ஜானகி, சகோதரர்கள் ஷரத் மற்றும் ஷ்யாம் ஆவர். சனூப், ராணிபுரத்தில் உள்ள பிரபல சுற்றுலா மையத்தில் இயங்கும் பொழுதுபோக்கு பூங்காவில் ZipLine ஆபரேட்டராகப் பணியில் சேர்ந்தார். பணிக்குச் சேர்ந்த மறுநாளே எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் அவர் ZipLine-லிருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து குறித்த முதற்கட்ட தகவலில், சனூப் ஒரு பெண் சுற்றுலாப் பயணியை ZipLine-ல் அழைத்துச் சென்றபோது, தனக்கான உரிய பாதுகாப்பு கயிற்றை முறையாக அணியவில்லை என்று கூறப்படுகிறது. பயணத்தின்போது பயமடைந்த அப்பெண், எதிர்பாராதவிதமாக சனூப்பின் சட்டையைப் பிடித்து இழுத்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். வேலைக்குச் சேர்ந்த மறுநாளே இளைஞர் ஒருவர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பொழுதுபோக்கு பூங்காக்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.