இந்த மனசு தான் கடவுள்… கனமழையால் இடிந்து விழுந்த பள்ளிக்காக… தன் சொந்த வீட்டையே வழங்கிய விவசாயியின் நெகிழ வைக்கும் செயல்..!

By Srimathi on புரட்டாதி 6, 2025

Spread the love

ராஜஸ்தான் பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25ஆம் தேதி கனமழை காரணமாக பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 21 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இத்தயரச் சம்பவத்தை தொடர்ந்து வகுப்பறை இல்லாத காரணத்தால், இங்கு படிக்கும் 50 மாணவர்களின் படிப்பு தடைப்பட்டது.

அப்பொழுது அந்த கிராமத்தை சேர்ந்த மோர் சிங் (60) என்ற விவசாய தொழிலாளி, தனது 2 படுக்கறை கொண்ட கான்கிரீட் வீட்டை கல்வித் துறைக்காக வழங்கினார். 2 வயது பேரன் உட்பட 8 பேருடன் வீட்டை விட்டு வெளியேறி, தனது விவசாய நிலத்தில், பிளாஸ்டிக் மற்றும் தார்ப்பாய் மூலம் குடிசை அமைத்து அதில் தங்கி வருகிறார். மேலும் “2ஆண்டுகளில் பள்ளிக்கு புதிய கட்டிடம் தயாராகிவிடும். அதுவரை நாங்கள் இங்கு சமாளித்துக் கொள்வோம்” என்றார்  மோர் சிங். மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர் இதை செய்ததாக கூறினார்.