இன்று பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும். மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதியும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 55 நாட்கள் பொதுத்தேர்வு தேர்வு விடுமுறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
