12ஆம் வகுப்பு கணக்கு பதிவியல் தேர்வில் முதல்முறையாக இந்த வருடம் முதல் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்ட அவர், 12ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்., 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும். கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் கொண்டு செல்லலாம் என்று தெரிவித்தார்.
மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும். மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதியும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதியும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
