உத்திர பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா, மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அர்ச்சனாவின் சகோதரர் அங்கீத் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது சகோதரி அர்ச்சனாவுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, சோனு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சகோதரியின் கணவர் சோனு, மாமனார் பிரேம்பால், மாமியார் நெஹ்னி தேவி, கணவருடன் பிறந்தவர்கள் பிரமோத், துர்கேஷ் தேவி ஆகியோர் சேர்ந்து அர்ச்சனாவை வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார். மேலும் 5 லட்ச ரூபாய் ரொக்கமும், ஒரு புல்லட் பைக்கையும் கேட்டு அர்ச்சனாவை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்திரவதை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கணவரின் சகோதரரான பிரமோத்துக்கு அர்ச்சனா மீது தீய எண்ணம் இருந்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இதே போல் தனது சகோதரியே சித்திரவதை செய்து ‘குதி குதி’ என்று சோனு தூண்டியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாக, அங்கீத் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சோனுவின் குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ச்சனா உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்தனர்.
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…
மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவிக) நிர்வாகி ஒருவர், பத்தாம் வகுப்பு படிக்கும் மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ச.…
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தத்…
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர்.…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 10…