ஏய் கீழே குதிச்சு சாவு… டார்ச்சர் செய்த கணவர், மாமியார்… விரக்தியில் இளம்பெண் எடுத்த முடிவு..!!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

உத்திர பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா, மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அர்ச்சனாவின் சகோதரர் அங்கீத் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது சகோதரி அர்ச்சனாவுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, சோனு என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு சகோதரியின் கணவர் சோனு, மாமனார் பிரேம்பால், மாமியார் நெஹ்னி தேவி, கணவருடன் பிறந்தவர்கள் பிரமோத், துர்கேஷ் தேவி ஆகியோர் சேர்ந்து அர்ச்சனாவை வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார். மேலும் 5 லட்ச ரூபாய் ரொக்கமும், ஒரு புல்லட் பைக்கையும் கேட்டு அர்ச்சனாவை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்திரவதை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

   

மேலும் கணவரின் சகோதரரான பிரமோத்துக்கு அர்ச்சனா மீது தீய எண்ணம் இருந்ததாக தெரிவித்தார். மேலும் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இதே போல் தனது சகோதரியே சித்திரவதை செய்து ‘குதி குதி’ என்று சோனு தூண்டியதால் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளதாக, அங்கீத் குமார்  தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சோனுவின் குடும்பத்தினரை விசாரித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ச்சனா உடல் நலம் தேறி வருவதாக தெரிவித்தனர்.