3-வது மாடிக்கு சென்ற நபர்… “என்னால தாங்க முடியல…” 44 வயதில் வாட்டிய தனிமை…. கடைசியில் நடந்த சோகம்…!!

By Devi Ramu on புரட்டாதி 4, 2025

Spread the love

திருமங்கலம் கேவிஎன் நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். சிவகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல ஆண்டுகளாக திருமணம் செய்வதற்கு சிவக்குமார் பெண் தேடி வந்ததாக தெரிகிறது.

ஆனால் சரியான வரன் அமையாததால் சிவக்குமார் மன உளைச்சலில் இருந்தார். நேற்று குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.