தவெக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வழக்கில் தமிழக காவல்துறை தனது அதிரடி நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று சென்னையைச் சேர்ந்த 3 பேர், கரூரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் என மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்த கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த சதித் திட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பியும் சேர்க்கப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
