திமுக கொடுத்த ஷாக்… அலறும் தவெக… 20 எம்.எல்.ஏ-க்களுக்கு வலைவீசிய ‘குதிரை பேரம்’… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு …!

By Visaka on ஆடி 2, 2026

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சி கவிழும் என்று திமுக முன்வைத்த கருத்துக்கு, தவெக மற்றும் அதன் தோழமை கட்சிகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன; குறிப்பாக, முதல்வர் விஜய்யும் இந்த விவகாரத்தில் நேரடியாகவே தனது எதிர்வினையை ஆற்றியுள்ளார். இந்தச் சூழலில், தமிழக அரசியல் களம் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க குதிரை பேரம் நடப்பதாக ஆளுநரிடம் திமுக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளது.

அதேநேரம், சுமார் 20 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க குதிரை பேரம் நடத்தி சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் தற்போது 5 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களால் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது புதியதொரு போர்க்கள சூழலும், உச்சகட்ட பதற்றமும் உருவாகியுள்ளது.