சுதந்திர தின ஸ்பெஷலாக போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும் டாப் தமிழ் படங்கள்.. இதோ லிஸ்ட்..!!

By Nanthini on ஆவணி 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை தரும் மாதமாக ஆகஸ்ட் மாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த மாதத்தில் மட்டும் சுமார் பத்து படங்கள் திரைக்கு வர உள்ளன. அந்தப் படங்கள் குறித்த பட்டியலை இதில் பார்க்கலாம்.

   

தங்கலான்:

   

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் கே ஜி எஃப் இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது.

 

டிமான்டி காலனி 2:

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 9 ஆண்டுகள் கழித்து சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இதில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில் பிக்பாஸ் அர்ச்சனாவும் நடித்துள்ளார்.

ரகு தாத்தா:

சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாகும் மற்றொரு திரைப்படம் தான் ரகு தாத்தா. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள நிலையில் சுமார் குமார் இயக்கியுள்ள இப்படம் இந்தி எதிர்பார்ப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த மூன்று படங்களும் சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது